முத்துப்பேட்டையில் வங்கி திறப்பதற்கு முன் காத்திருக்கும் மக்கள் வீடியோபணம் பற்றாக்குறையால் வங்கி திறப்பதற்கு முன் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி வங்கிகளில் மத்திய அரசு ரூ.500, ரூ.1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த நாள்முதல் இன்று வரை கூட்டம் குறையவில்லை. பெரும்பாலான வங்கிகளில் இறுதிக்கட்ட நாளுக்கும் இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால், வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் அனைத்து  தரப்பு மக்களும் பணத்திற்கும், பணம் பரிமாற்றத்திற்கும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை பகுதியில் சில ஏடிம் மையங்களில்  எப்போதாவது பணம் வைக்கின்றனர். அதுவும் சில மணி நேரத்தில் தீர்ந்து விடுகிறது. இந்த நிலை இன்னும் தொடர்வதால் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகள் திறக்கும் முன்பே வங்கியின் வாசலில்  நீண்ட வரிசையில் காத்து இருக்கிறார்கள். பல வங்கிகளின் முன்பு பெரும்பாலான பெண்கள் வங்கி திறப்பதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே  வந்து அமர்ந்து விடுகின்றனர்.
நன்றி: திரிஎம் பஷீர் அஹமத் சூணா இன
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.