முத்துப்பேட்டையில் கழிவுநீரால் ஏற்பட்ட சுகாதாரகேடு பிரச்னைக்கு தீர்வு



முத்துப்பேட்டையில் சாலையில் ஓடிய கழிவு நீரை சுத்தம் செய்ய, தினகரன் செய்தி எதிரொலியால் புதிய குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 8வது வார்டு பகுதிக்குட்பட்ட தென்னை மரைக்காயர் தெரு மற்றும் பினாமுனா  லைன் பகுதியில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இந்த இரு சிமென்ட் சாலையில் நடுவே தரைக்கு கீழ் செல்லும் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் சிமென்ட்; சாலையில் கழிவுநீர் வழிந்து  ஓடுகிறது.  இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.
இது குறித்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து கடந்த 13ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் உமாகாந்தன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கழிநீர் குழாயில் உள்ள அடைப்பை அகற்றவும்,  பழைய குழயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிக்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த 2 நாட்களாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பல மாதங்களாக கழிவு நீர் சாலையில் ஓடியதை கண்டும் காணாமல் இருந்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு தக்க சமையத்தில் சுட்டிக்காட்டிய தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கும்  அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.