முத்துப்பேட்டை பகுதியில் வங்கி கணக்கில் மோடி பணம் போடுவதாக ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் நகல் வாங்கும் மகளிர் குழுவங்கி கணக்கில் பிரதமர் மோடி பணம் போடுவதாக கூறி ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் நகலை, மகளிர்குழுவினர் வாங்குவதால், பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, பாலகிருஷ்ணாபுரம் பகுதியிகளில் பல்வேறு  மகளிர் குழுக்களின் ஒருங்கினைப்பாளர்கள், உறுப்பினர்களிடமும், நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு  மக்களிடம் கடந்த சில நாட்களாக வங்கி பாஸ்புக், ஆதார் அட்டை நகல் வாங்கி  வருகின்றனர். எதற்காக இதனை கேட்கிறீர்கள் என்று பொதுமக்கள்  கேட்டதற்கு வங்கி  கணக்கில் ரூ.50000 பிரதமர் மேடி வழங்க இருப்பதாக கூறியுள்ளனர். இதை நம்பி  மக்கள் கூட்டம் கூட்டமாக பல்வேறு பகுதிகளில் வரிசையில் நின்று ஆவணங்களின் நகல்களை கொடுத்து தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்த அறிவிப்பை பிரதமர் அறிவிக்கவில்லை என்று கேட்டால், இன்னும் 2 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள். இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து சித்தமல்லியை சேர்ந்த சமூக சேவகி சிவசங்கரி சித்தமல்லியில் உள்ள வாழ்ந்து காட்டுவோம்  மகளிர் குழுக்களின் ஒருங்கினைப்பாளர் கோமதியிடம்   கேட்டபோது “எங்க உயர் அதிகாரிகள் வாங்க சொல்கிறார்கள் வாங்குகிறோம் எங்கள் மீது சந்தேகம் இருந்தால் போலீசில் புகார் கொடுங்கள்” என்றும்  முன்னுக்குப்பின் முரணாகவும்  பேசியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திமுக மாவட்ட பிரதிநிதி டிவிஎஸ் அண்ணாத்துரை கூறுகையில்:  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் மகளிர் குழுக்களின் ஒருங்கினைப்பாளர்கள், மகளிர் குழுவில் உள்ளவர்களிடமும் மற்ற மக்களிடமும்  பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு ஜெராக்ஸ்களை வாங்குகிறார்கள், மேலும்  நூறு நாள்வேலை  செய்பவர்களிடமும் பேங்க் பாஸ்புக் ஆதார் கார்டுகளையும் வசூல் செய்கிறார்கள்.  காரணம் கேட்டால், அதிகாரிகள் வாங்க சொன்னதாகவும், எல்லோருடைய அக்கவுண்டிலும் பிரதமர் மோடி 50,000 ஆயிரம்  ரூபாய் போட இருப்பதகவும் கூறுகின்றனர்.  இதனை அழுத்தமாக நாங்கள் கேட்டால்  இங்கிருந்து சென்று விடுகின்றனர். பிரதமர் மோடி பணம் போட போவது உண்மையா ?  அல்லது கருப்பு பணத்தை மாற்ற திட்டமா? என்ற குழப்பதில் மக்கள் உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நன்றி: தினகரன்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.