முத்துப்பேட்டையில் பரபரப்பு: பள்ளி சத்துணவில் பிளாஸ்டிக் முட்டை?முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்கு தெருவில் மதியலங்கார அரசு தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 50 மாணவர்கள் படிக்கின்றனர்.  இம்மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின்படி மதிய உணவு வழங்கப்படுகிறது. நேற்று மதிய உணவோடு வழங்கப்பட்ட முட்டை வித்தியாசமாக இருந்ததாக  கூறப்படுகிறது. மாணவர்கள் முட்டையை சாப்பிட்டபோது ரப்பரை மெல்வது இருந்ததாக கூறினர். சிலர் முட்டையை வீட்டுக்கு எடுத்துச்சென்றனர்.

அதே பள்ளியில் படிக்கும் யாக்கூப் என்பவரது மகளும் முட்டையோடு வீட்டுக்கு சென்றார். அந்த முட்டையின் தோல்  பிளாஸ்டிக்  போல் இருந்ததாக யாக்கூப்  குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து சிலர்  முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தனர். போதிய ஆதாரமில்லாததால் புகார் பெறப்படவில்லை.

இதுகுறித்து மதியலங்கார அரசு தொடக்கபள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாசர் கூறுகையில், பள்ளியில் வழங்கப்பட்டது சீனாவில் தயாரிக்கப்படும்  பிளாஸ்டிக் முட்டையாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறேன். இது குறித்து பள்ளியில் விசாரித்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.

Thanks To: Dinakaran
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.