ஷீஆ பிரிவு கொடுங்கோலன் பஷர் அல் அஸாத்தால் அலெப்போவில் கொன்றுகுவிக்கப்படும் முஸ்லிம்கள்.அலவிய்யா ஷீஆ பிரிவு கொடுங்கோலன் பஷர் அல் அஸாத்தால் சிரியாவின் அலெப்போவில் கொன்றுகுவிக்கப்படும் சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்கள்.

2016 டிசம்பர் 12 திங்கள் கிழமை முதல் சிரியாவில் சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனச் சுத்திகரிப்பு படுகொலைகள் இடம்பெற்று வரகின்றன. சிரியாவின் வரலாற்றுப் புகழ் மிக்க அலெப்போ பிராந்தியத்தில் தான் இந்தப் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் ஜனாதிபதியான யுத்தக் குற்றவாளியான அலவிய்யா ஷீஆ பிரிவைச் சேர்ந்த பஷர் அல் அஸாத் தான் இந்த ஈனத்தனமான குற்றங்களைப் புரிந்து வருகின்றார்.

 ரஷ்யாவின் ஜனாதிபதியான இன்னொரு யுத்தக் குற்றவாளியும் இஸலாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதரான பரம விரோதியுமான விலாடிமிர் புடினின் தீவிர ஆதரவோடும் அனுசரணையோடும் தான் இந்தக் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. லெபனானின் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈராக்கின் தற்போதைய ஆட்சியாளர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஷீஆக்களுக்கு பூரண ஆதரவு வழங்கி வரும் ஈரான் இந்தக் குற்றங்களுக்கு பக்க பலமாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் அறிக்கைகளின் படி 'அஸாத்தின் இரத்த தாகம் கொண்ட ஷீஆ கொலையாளிகள் ஈவு இரக்கமின்றி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். பல பெண்களை தடுத்து வைத்து பாரபட்சமின்றி பரவலாக பாலியல் துஷ்பிரயோகம் புரிந்து வருகின்றனர். பலர் எந்தக் காரணமும் இன்றி கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்து வயது பால் என எந்த வித்தியாசமும் இன்றி மக்களை கொன்று அவர்களின் வீடுகளையும் சாம்பலாக்கி வரகின்றனர்'

ஒரே சம்பவத்தில் மட்டும் இவ்வாறு 82 பேர் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டு அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை ஐ.நா அறிக்கையில் ஊர்ஜித் செய்யப்பட்டுள்ளது. ஜெனீவாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ.நா மனித உரிமை பேரவை பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் அஸாத்தின் படைகள் குற்றங்களைப் புரிந்து வருகின்றனர். அவரின் சகாவான உலகம் முழுவதும் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற ஷீஆ ஜிஹாத் குழுக்கள் இதற்கு பக்க பலமாக இருந்து வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாரிய படுகொலைகளுக்கு அப்பால் 13 சிறுவர்களும், 11 பெண்களும், 58 ஆண்களும் இந்தக் குழுக்களால் அவர்களின் வீடுகளில் இருந்து தாறுமாறாக வெளியே நடு வீதிக்கு இழுத்து வரப்பட்டு கூட்டமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் ரூபர்ட் கொல்வில் ஊர்ஜழதம் செய்துள்ளார். பொது இடங்களில் பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்டறுள்ளன.

பாலியல் ரீதியான தாக்குதல்களும் பகிரங்கமாகவே இடம்பெற்றுள்ளன. தீயில் கருகிய சடலங்களை வீதிகள் தோறும் காணும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. 2016 டிசம்பர் 12 திங்கள் கிழமை முதல் இந்தக் காட்சிகளைக் காணக் கூடியதாக இருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அலெப்போ வீதிகளில் குவிக்கப்பட்டு வரும் சடலங்கள் அதன் அவல நிலையை விளக்குவதாக அமைந்துள்ளன. அதேபோல் கணிசமான அளவு சடலங்கள் கட்டிட இடிபாடுகளுக்குள்ளும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. பாதுகாப்பு படையினரின் சொதனைச் சாவடிகளில் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் கணவன் மற்றும் பிள்ளைகள் முன்னாள் பகிரங்கமாக கற்பழிக்கப்படுகின்றனர்.

'இங்கு மனிதாபிமானம் முற்றாக உருகிப்போய் விட்டது' என்று ஐ.நாவின் அவசர நிவாரண ஒருங்கிணைப்பு அலுவலக பேச்சாளர் ஜென்ஸ் லியாகா நிலைமையை வர்ணித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் தாத் அல் ஹுஸேன் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கொன்று குவிக்கப்படும் இந்த ஈனச் செயலுக்கு அமெரிக்காவும் அதன் சேந நாடுகளும் கூட பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா, ஈரான் மற்றும்சிரியா என்பன இணைந்து மேற்கொள்ளும் இந்தக் கொடிய தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

'வீதிகளில் சடலங்கள் குவிந்து கிடக்கின்றன. மக்களால் அவற்றை அப்புறப்படுத்தக் கூட முடியவில்லை. காரணம் தொடர்ந்து நடுத்தப்பட்டு வரும் மோசமான குண்டு வீச்சுக்கள். உயிர் தப்பியுள்ள ஒவ்வொருவரும் தங்களத உயிரை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற அச்சத்துக்கு அளாகியுள்ளனர்' என்று ஹுஸேன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அட்டூழியங்களும் அழிவுகளும் என்று முடிவுக்கு வருமோ என்பதைக் கூட குறிப்பிட முடியாத நிலை காணப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

'அடுத்து என்னதான் நடக்கப் போகின்றது. சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் தொடர்ந்து தனது கரங்களை விரித்து விட்டால் நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து உள்ளது' என்று அவர் எச்சரித்துள்ளார். தற்போது அலெப்போவில் இடம்பெறும் இந்தக் கொடூரமான படுகொலைகள் சிரியாவின் ஏனைய நகரங்களான தௌமா, றக்கா, இத்லிப் என்பனவற்றிலும் பரவக் கூடிய வாய்ப்பக்கள் உள்ளன. இவையும் ஒரு காலத்தில் கெரில்லாக்களின் கட்டப்பாட்டில் இருந்த பிரதேசங்கள். எனவே இந்தப் படுகொலைகள் தொடர சர்வதேச சமூகம் அனுமதிக்க முடியாது என்றும் ஹுஸேன் தனது எச்சரிக்கையில் தொடர்ந்து தெரிவத்துள்ளார்.


அலெப்போவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டர் அமைப்பான வைட் ஹெல்மட் (வெள்ளை தலைக் கவசம்) 'அலெப்போ கிட்டததட்ட நரகலோகம் போல் காட்சி அளிக்கின்றது. முதியவர்கள் பலர் கடும் குளிரைத் தாங்க முடியாமல் மரணம் அடைந்து வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் இன்னும் கவலைக்கிடமான விடயம் பல பெண்கள் தமது மானத்தை கயவர்களயிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பெண்கள் தமது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வழி தெரியாமல் உயிரை மாயத்துள்ளனர் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

தமது கதியை வெளி உலகுக்கு சொல்லுமாறு அங்குள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் வேண்டுகொள் விடுத்துவிட்டே அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வாறான ஒரு செய்தியில் 26 வயதான வினா அல் ஷாமி என்ற பெண் ஒரு விடியோ காட்சியை பதிவு செய்து வெளியிட்டுள்ளதோடு தனது டுவிட்டரிலும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

'அலெப்போவில் இறுதி நாள் ஆரம்பமாகிவிட்டது. நான் பேசுவதைக் கேட்கும் எல்லோருக்கும் ஒன்றை சொல்லுகின்றேன். நாங்கள் இங்கொ பாரிய அளவிலான படுகொலையை எதிர்நோக்கியுள்ளோம். இது எனது கடைசிக் காணொளியாக இருக்கலாம். கொடுங்கொலன் அஸாத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த 50 ஆயிரத்துக்கும் மேலான பொது மக்கள் பகிரங்க படுகொலை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

இன்னும் பலர் குண்டு வீச்சுகளுக்குப் பலியாகி கட்டிட இடிபாடுகளுக்குள் மரணித்துக் கொண்டு இருக்கின்றனர்' என்று அந்தப் பெண் பதிவு செய்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான நடவடிக்கைகள் இங்கே தொடங்கப்பட வேண்டும் என்று பிலால் அப்துல் கரீம் என்ற ஊடகவியலாளர் வேண்டுகொள் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் 'ரஷயாவின் விமானத் தாக்குதல்கள் ஓய்வின்றி தொடருகின்றன. மக்களை கொல்வதோடு மட்டும் அன்றி காயமுற்ற மக்களை காப்பாற்ற துணிச்லோடு வெளியே வருபவர்களையும் இலக்கு வைத்து ஒரே நெரத்தில் இரு வழி தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் தாக்குகின்றனர்.

பின்னர் சற்று ஓய்வாக இருக்கின்றனர். இடிபாடுகளை அகற்ற மக்கள கூடியதும் மீண்டும் அந்த மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார். அலெப்போவின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர் என்று ஐ.நா அறிக்கைகள் சில ஊர்ஜிதம் செய்துள்ள நிலையிலேயெ இந்தத் தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த அலெப்போ படுகொலைகளை சிலர் செரப்ரனிகாவில் இடம்பெற்ற படுகொலைகளோடும் ஒப்பிட்டுள்ளனர்.

அலெப்போவின் கிழக்குப் பகுதியில் 180 பேர் ஒரேயடியாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இன்னும் பலர் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி தவிக்க விடப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் ஊடகவியலாளர் யிவோன் றிட்லி அலெப்போ நிலைமை பற்றி குறிப்பிடுகையில் 'மூடப்பட்டுள்ள அலெப்போ சுவர்களுக்குள் இருந்து வீரம் மிக்க கதைகளும் வெளிவருகின்றன.

சிரிய மக்கள் முடியுமானவரை எதிர்த்து நிற்கின்றனர். இவர்கள் முற்று முழுக்க உள்ளுர் வாசிகளே தவிர மேற்குலக ஊடகங்கள் குறிப்பிடுவதுபோல் வெளிநாட்டவர்கள் அல்ல. கசாப்புக்கடைக்காரன் அஸாத்தின் கொலைகார கயவர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பு தேடி ஓடிக் கொண்டும் இருக்கின்றனர்' என்று அவர் வர்ணித்துள்ளார்.

'அலெப்போவின் உண்மையான களநிலவரம் என்ன என்பது பற்றி உலக மக்கள் தவறாகப் புரிந்து கொள்ள இடமளிக்கக் கூடாது. இன்னும் சூமார் மூன்று ரட்சம் சிரியா மக்கள் அங்கு சிக்குண்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வெளியேற்றல் நடவடிக்கையின் போது 10500 பேர் மட்டுமே வெளியேற சம்மதித்துள்ளனர்' என்று ஊடகவியலாளர் பிலால் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

முற்றுகைக்கு உள்ளான நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் முடங்கிப் போய் உள்ளனர் என்பதே இதன் அர்த்தம். இவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை. எதுவுமே அற்ற நிலையில் பீப்பாய் குண்டுகளையும், பங்கர்களை நிர்மூலமாக்கும் குண்டுகளையும், ஷெல்களையும் ஏவுகணைகளையும் தாங்கி மரணிப்போம் என்ற முடிவிலேயே இந்த மக்கள் அங்கு தங்கி உள்ளனர் என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

 சிரியாவின் அரச படைகள் இழைத்து வரும் அட்டூழியங்கள் இங்கே கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றன.

அலெப்போ மோதல்களில் வெளிநாட்டு கூலிப்படையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்ற கருத்தையும் ஊடகவியலாளர் அப்துல் கரீம் நிராகரித்துள்ளார். சிரியா விடுதலை இராணுவம் என்ற குழுவைச் சேர்ந்தவர்களும் உள்ளுர் மக்களும் தான் அங்கு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் உளளுர் வாசிகளே என்பதை அவர் ஊர்ஜிதம் செய்துள்ளார். அவர்களுள் பலரோடு தான் பேசியதாகவும்அவர்கள் அப்போது தாம் வசிக்கின்ற இடங்கள் பற்றி மிகச் சரியான தகவல்களையே தந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சிரியா படைகளை எதிர்த்துப் பேராடுகின்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பதும் அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான விடயம் என அவர் கூறுகின்றார்.

 சிரியாவில் உள்ள ஒரேயொரு பயங்கரவாத குழு தாயேஷ் என்பதே. ஆனால் அவர்கள் அலெப்போவில் காணப்படவில்லை என்பதே அப்துல் கரீமின் தகவலாகும்.

அலெப்போ யுத்தத்தில் கடந்த ஆண்டு ரஷ்யா தலையிட்ட போது தாயேஷ் குழுவினர் அழிக்கப்படுவர் என்று புடின் அறிவித்திருந்தார். அப்படியாயின் தாயேஷ் குழுவின் பிரசன்னம் இல்லாத அலெப்போவின் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது ஏன் சிரியா குண்டு மழை பொழிய வேண்டும்?.

அலெப்போ பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் தான் அமெரிக்காவும் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளது. தாயேஷை அழிப்பதாகக் கூறி குண்டு மழை பொழியும் இந்த சர்வதேச சக்திகளுக்கு என் மக்கள் மீது உண்மையான மனிதாபிமானத்தை பொழிய முடியாது என்றும் அப்தல் கரீம் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

லத்தீப் பாரூக்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.