மட்டக்களப்பில் கடும்போக்குவாதிகள் நுழையவே முடியாது. மட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவுமட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை இடம்பெறவிருந்த பொதுக்கூட்டம் ஒன்றுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பொது மக்களுக்கு அதனால் சிரமங்கள் ஏற்படும் என்பதனால் இதற்கு தடைவிதிக்குமாறு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.பிரேம்நாத் இந்த தடையுத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளான சத்துருக்கொண்டான் தொடக்கம் காத்தான்குடி, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றுகூடவோ கூட்டங்களை நடாத்தவோ, ஆர்ப்பாட்டங்களை நடாத்தவோ தடை விதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.