தீவிரவாதிகளால் கொல்ல முடியாத காவலரை கொலை செய்த பணத்தட்டுப்பாடுராகேஷ் சாந்த் என்ற 54 வயது முன்னால் ரிசர்வ் போலிஸ் படையை சேர்ந்தவர் கஷ்மீர் பாராமுல்ல பகுதியில் 1990 ஆம் வருடம் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் ஐந்து முறை தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்தவர். தீவிரவாதிகளின் தோட்டாக்கள் கொல்ல முடியாத இவரை நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு கொலை செய்துவிட்டது.
உத்திர பிரதேசத்தின் புதானா கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் சாந்த். இவர் கடந்த வாரத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் தாஜ்கஞ் கிளைக்கு தனது மருத்துவ செலவிற்காக பணத்தை எடுக்க ஒவ்வொரு நாளும் சென்று வந்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார். இதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2012  ஆம் ஆண்டு தலைமைக் காவலராக ஒய்வு பெற்ற சாந்த் தன் பெயரில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து ராகேஷ் சாந்தின் மகன் சுஷில் குமார் கூறுகையில், “எனது தந்தைக்கு அவரது இதைய நோய் சிகிச்சை காரணமாக அவசரமாக பணம் தேவைப்பட்டது. அவருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூபாய் 15000 வந்து கொண்டிருந்தது. இதில் அவருக்கு 6000 முதல் 7000 வரையில் மருத்துவ செலவிற்காக பணம் தேவைப்பட்டது.” என்று கூறியுள்ளார்.

மேலும் “அவருக்கு மன அழுத்தம் காரணமாகவும் மருத்துவம் தேவைப்பட்டது. கடந்த மாதம் முதலே அவர் இந்த பணப்பிரச்சனையால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பல முறை பணம் எடுக்க முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் அவர் மன அழுத்தத்தில் அவரது உயிரை மாய்த்துக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.” என்று கூறியுள்ளார்

இவர் எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் 1990 இல் பாராமுல்லாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஐந்து முறை மார்பில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்தவர். இதுவே அவரின் இதைய நோய்க்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.