உப்பை எவ்வளவு உபயோகிக்கணும் தெரியுமா?உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள அளவை விட இந்தியர்கள் அதிக அளவு உப்பை பயன்படுத்தி வருகிறார்கள் என தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமானது ஒரு நபர் ஒரு நாளுக்கு 5 கிராம் அளவே உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.இந்த அளவை மீறி உப்பை அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள்,உடல் நல பாதிப்பை சந்திக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தியர்கள் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை விட இருமடங்கு அளவு உப்பை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.ஒரு நாளுக்கு 10.9 கிராம் உப்பை ஒவ்வொரு இந்தியரும் உட்கொண்டு வருகிறார்.குறிப்பாக டெல்லிவாசிகள் அதிகபட்சமாக 14.3 கிராமும்,மும்பைவாசிகள் 10.21 கிராமும்,கொல்கத்தாவில் 9.81 கிராமும்,பெங்களூரு மற்றும் சென்னையில் குறைந்தபட்சமாக 9.38 கிராமும் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட உப்பை அதிகமாக உட்கொள்வதால் உயர் ரத்த அழுத்தம்,இதய நோய்,இரைப்பை புற்றுநோய்,எலும்பின் வலு குறைவது போன்ற உடல் நலக் குறைபாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சிறுவயதிலிருந்தே உங்கள் குழந்தைகளுக்கு குறைவாக உப்பு சேர்க்கப்பட்ட உணவை அளித்து பழக்குங்கள்.ஊறுகாய்,அப்பளம் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள்.இவற்றின் மூலம் அதிக அளவு உப்பு உட்கொள்வதை தவிர்க்க முடியும்.

இயற்கையாகவே நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலிருந்து 300-400 கிராம் அளவுக்கு உப்புச்சத்து கிடைக்கிறது.தானியங்கள்,பருப்பு வகைகள்,காய்கறிகள்,பால்,இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் சோடியம் நிறைந்து காணப்படுகிறது.எனவே அடிக்கடி,அதிக அளவில் உப்பை சேர்த்துக் கொள்வதை தவிர்த்தால்,ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.