ஷார்ஜாவில் தொழிலாளர்கள் மீது பஸ் மோதல் !ஷார்ஜாவில் புதன்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் பணிமுடிந்து தங்குமிடம் திரும்புவதற்காக சாலையோரம் காத்துக் கொண்டிருந்த 8 இந்தியர்கள் மற்றும் 2 பாகிஸ்தானிய தொழிலாளர் குழு மீது சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் எதிர்பாராவிதமாக மோதியதில் 31 வயதுடைய இந்தியர் ஒருவர் மரணமடைந்தார் மற்றவர்கள் காயமடைந்து அஜ்மான் கலீபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்கைக்குப்பின் பலர் வீடு திரும்பினர்.

ஷார்ஜா, அல் ஹம்ரியா சாலையில் நடைபெற்ற இந்த விபத்து பஸ் டிரைவரின் கவனக்குறைவாலேயே ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதால் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், டிரைவர்கள் சாலை விதிகளை மதித்து நடக்கவும், கவனமாக வாகனங்களை இயக்குமாறும் ஷார்ஜா போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.