தவறாக தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்:- நீதிபதி ஏ.பி.ஷாதீவிரவாத குற்றம் சுமத்தப்படுபவர்களை அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் அறிவிக்கும் வரை ஊடகங்கள் அவர்களை குற்றவாளி என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தவறாக தீவிரவாத குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான குழு டிசம்பர் 10 ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடு அந்தந்த வழக்கையும் அவற்றால் பாதிப்பட்டவருக்கு ஏற்பட்ட பொருளாதார மற்றும் பொருளாதாரம் சாராத இழப்புகளை கருத்தில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும் என்று இந்த குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2016 அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி Innocence Network India அமைப்பு தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதிகள் என்று வெளியானவர்களுக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்படுத்தியத்து. இதில் நாடு முழுவதிலும் இருந்து தவறான தீவிரவாத வழக்கில் பாதிக்கப்பட்ட 15  நபர்கள் இந்த குழு முன் நிருத்தப்பட்டனர். இதில் தீவிரவாத வழக்கு என்று வரும்போது இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று தெளிவுபடுத்தப்பட்டது. கைதில் இருந்து அவர்கள் நிரபராதி என்று விடுவிக்கப்படுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் பங்கு வகித்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும் என்றும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த தீர்ப்பாயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தவறான கைதுகள் வெறுமனே தொழில்நுட்ப கோளாறுகல் காரணமாகவோ அல்லது மனிதர்களின் கவனக்குறைவுகள் காரணமாகவோ நடைபெறுவது அல்ல என்றும், இவை நன்கு அறிந்து தீய நோக்கத்தோடு வேண்டுமென்றே நிகழ்த்தப்படுபவை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. நாட்டின் எந்த ஒரு குண்டு வெடிப்பின் பிறகும் முஸ்லிம்களை சுற்றி வளைத்து அவர்கள் தான் அதற்கு காரணம் என்று கூறி கைது செய்வது புலனாய்வுத்துறைகளுக்கு வாடிக்கையாகிவிட்டது என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 2006 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு. இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்களை அவர்கள் சிமி இயகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்தினார்கள் என்று கூறி காவல்துறையினர் கைது செய்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயம் காவல்துறையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொருவர் சம்பவம் நடந்த இடத்திற்கு பல நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் பராத் இரவு தொழுகை வணக்கங்களில் ஈடுபட்டிருந்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களில் புலனாய்வுத்துறையினருக்கு தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட்டுளளது என்று இந்த குழு தெரிவித்துள்ளது. இத்தகைய சட்டங்கள் இந்த துறையினரை சட்டத்தை மதிக்காத நிலைக்கு இட்டுச்சென்றுவிட்டது என்றும் இதனால் தான் இத்தகைய போலியான தீவிரவாத குற்றச்சாட்டுகளும் கைதுகளும் நடைபெறுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த தீர்ப்பாயம் கூறிய பரிந்துரைகளாவது:
இழப்பீடு: தீவிரவாத வழக்குகளில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசு அந்தந்த வழக்கை பொருத்தும் இந்த குற்றச்சாட்டினால் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு மற்றும் இன்ன பிற இழப்புகளை கணக்கில் கொண்டும் இழப்பீடு வழங்க வேண்டும்.
பொறுப்பு: இத்தகைய தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தும் அதிகாரிகள் அதற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும். இது தொடர்பாக துறை சார் விசாரனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தவறான நோக்கத்தில் இதில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: ஊடங்கங்கள் தங்களது பரபரப்பான மற்றும் பாகுபாடு உடைய செய்திகள் மூலம் வாழ்க்கைகளை அழிக்கும் சக்தியை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். மேலும் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்றங்கள் அறிவிக்காதவரை அவரை குற்றவாளிகள் என்று ஊடகங்கள் அறிவிப்பதை தவிர்க்க வேண்டும். இன்னும் ஒருவரை குறித்து அவரது கைதின் போது தவறான செய்திகளை ஒரு ஊடகம் வெளியிட்டிருக்குமாயின் அதற்கு அந்த ஊடகம் மன்னிப்பு கேட்டு மறுப்பு செய்தியை வெளியிட வேண்டும்.

சட்ட சீர்திருத்தங்கள்: சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு14(6) சட்ட கட்டமைப்பில் பின்பற்றப்பட வேண்டும். சித்தரவதை தடுப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.  தீவிரவாத தடுப்பு சட்டம், இந்திய சாட்சி சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் காவல்நிலைய வன்முறைகல் உட்பட தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

நிறுவன மற்றும் சமுதாய சீர்திருத்தங்கள்: குற்ற வழக்குகளில் இருந்து குற்றமற்றவர் என்று விடுதலையானவர்களை கவனிக்க என்று ஒரு தனி பிரிவை NHRC மற்றும் SHRC போன்ற மனித உரிமை அமைப்புகள் நிறுவ வேண்டும். இப்படி விடுதலையானவர்களின் மறுவாழ்விற்கு பொது மக்களும் தங்களால் ஆன முறச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவை இந்த தீர்ப்பாயம் கூறிய பரிந்துரைகள்

இத்துடன் இது போன்ற தவறான குற்றச்சாட்டு மற்றும் கைது ஆகிய பிரச்சனைகளை கண்டறிந்து அதில் தலையிடாத தேசிய மனித உரிமை கழகம் மற்றும் பல்வேறு மாநில மனித உரிமை கழகங்களின் தோல்வியை குறித்து இந்த குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் முதன்முறையாக வெளியானது என்று கூறும் அளவிற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் இத்தகைய பாதிப்பினை தடுக்கும் வழிகள் மற்றும் புனரமைப்பு ஆகியவை எவ்வாறு ஒரு அரசின் கடமை என்றும் இவை எவ்வாறு சட்டத்தின் அடிப்படையில் வருகின்றது என்பதையும் விளக்கியுள்ளது.

இந்த குழுவில் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வுடன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சயீத் அக்தர் மிர்சா, ஜி.எஸ்.பாஜ்பாய், பிரபல பத்திரிக்கையாளர் நீனா யாஸ், உள்ளிட்ட பலர் பலர் அடங்கியிருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.