வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளை அக‌திக‌ளாக்கும் பிர‌க‌ட‌ன‌மே ஜ‌னாதிப‌தியின் வில்ப‌த்து பிர‌க‌ட‌ன‌மாகும்...பேரின‌வாதிக‌ளின் நிக‌ழ்ச்சி நிர‌லை இன்றைய‌ ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும்  க‌ன‌ க‌ச்சித‌மாக‌ கொண்டு செல்கிறார்க‌ள் என்ப‌த‌யே ஜ‌னாதிப‌தியின் வில்ப‌த்து ச‌ம்ப‌ந்த‌மான‌ அறிவித்த‌ல் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. அக்க‌ட்சி மேலும் தெரிவித்த‌தாவ‌து,

90ம் ஆண்டு வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ள் அன்றைய‌ ஐ தே க‌ ஆட்சியின் போது புலிகளால் அனைத்த உறிஞ்ச‌ப்ப‌ட்டு வெளியேறிய‌ இட‌ங்க‌ள் 20 வ‌ருட‌ங்க‌ளில் காடாகிப்போன‌து என்ப‌தை நாடு அறியும். இந்த‌ நிலையில் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் மஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் சிற‌ந்த‌ வ‌ழி ந‌டாத்த‌லில் யுத்த‌ம் நிறைவு பெற்ற‌பின் தாம் வ‌ழ்ந்த‌ இட‌ங்க‌ளுக்கு மீண்ட‌ போது அவை காடாக‌ காட்சிய‌ளித்த‌ன‌. இத‌ன் கார‌ண‌மாக‌ பெசில் ராஜ‌ப‌க்ஷ‌வின் உத‌வி மூல‌ம் முஸ்லிம்க‌ள் அவ‌ற்றை துப்ப‌ர‌வு செய்து கொஞ்ச‌ப்பேர் மீள் குடியேறிய‌ போதும் அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் அற்ற‌ நிலையிலேயே வாழ்வை ஆர‌ம்பித்த‌ன‌ர்.

இந்நிலையில் முஸ்லிம்க‌ள் மீள் குடியேறுவ‌தை த‌டை செய்ய‌ வேண்டும் என்ற‌ வெளிநாட்டு ட‌ய‌ஸ்போராக்க‌ளின் வேண்டுத‌லை க‌ட‌ந்த‌ அர‌சின் அமைச்சில் இருந்த‌ ச‌ம்பிக்க‌ போன்ற‌வ‌ர்க‌ள் பொதுப‌ல‌ சேனாவை ப‌ய‌ன் ப‌டுத்தி வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளை அச்சுறுத்தின‌ர். இத‌ற்கு ப‌க்க‌ ப‌ல‌மாக‌ சில‌ ஊட‌க‌ங்க‌ளும் இன‌வாதிக‌ளுக்கு துணை போகின‌. ஆனாலும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அர‌சு மேற்ப‌டி இன‌வாதிக‌ளை க‌ண்டு கொள்ள‌வில்லை.

இந்த‌ உண்மைக‌ளை உண‌ராத‌ இல‌ங்கை வாழ் முஸ்லிம்க‌ள் உண‌ர்ச்சியை ம‌ட்டும் பாவித்து எடுத்த‌ முடிவு கார‌ண‌மாக‌ ம‌ஹிந்த‌ தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டு ந‌ல்லாட்சி கொண்டுப் வ‌ர‌ப்ப‌ட்டு அந்த‌ அர‌சு இன்று மீண்டும் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளை அக‌திக‌ளாக்கும் பிர‌க‌ட‌ன‌மே ஜ‌னாதிப‌தியின் வில்ப‌த்து பிர‌க‌ட‌ன‌மாகும்.

ஆக‌வே ஜனாதிப‌தி அவ‌ர்க‌ள் இது விட‌ய‌த்தை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமையான‌ அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீனுட‌ன் இணைந்து பேசி வில்ப‌த்து பிர‌க‌ட‌ன‌த்தை மீள் ப‌ரிசீல‌னை செய்ய‌ வேண்டும். இல்லாவிட்டால் வ‌ட‌மாகாண‌ முஸ்லிம்க‌ள் ஒன்றிணைந்து ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை வ‌ட‌க்குக்கு அழைத்து இது விட‌ய‌த்தை அவ‌ரிட‌ம் விள‌க்கி இத‌ன் உண்மைத்த‌ன்மையை அவ‌ர் பேச‌ வைக்க‌ முய‌ற்சிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி வ‌ட‌மாகாண‌ முஸ்லிம் சிவில் ச‌மூக‌த்தை கேட்டுக்கொள்கிற‌து என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.