ஜெ., மறைவு தமிழகத்திற்கு விடிவு” “அதிமுக ஒழிந்தது” இப்படி சொன்ன பாஜக தலைவரை என்ன செய்யலாம்?
முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உடல் நலம் பாதிப்பால் இறந்தார். இவரது மறைவையொட்டி கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தமிழக மக்களின் மனதை மிகவும் புன்படுத்தகூடியதாக அமைந்துள்ளது.
கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன் முகநூலில் பதிவில் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் யுகம் முடிவடைவதன் மூலம் தமிழக அரசியலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று கருதுகிறேன்.
தனிநபர் வழிபாடு, மாநில உணர்வை அடிப்படையாக கொண்ட திராவிட அரசியல் மெதுவாக தேசிய அரசியலின் மைய நீரோட்டத்தை நோக்கி வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
மேலும் தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர் செல்வத்தின் கீழ் அதிமுகவால் அதிக காலம் நீடிக்க முடியாது. என்னவாயினும், நாம் காத்திருப்போம். இவ்வாறு அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பார்த்து கேரளாவில் உள்ள பலர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.