வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ் வழங்கும் ஏர்செல்: புதிய சலுகை அறிவிப்பு!ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் புதிய சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ஸ் கால் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

அதன் படி ஏர்செல் நிறுவனம் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்திருக்கிறது. RC 14 மற்றும் RC 249 என இரண்டு திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இதில் RC 14 ரீசார்ஜ் செய்யும் போது அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை பெற முடியும். இதற்கான வேலிடிட்டி ஒரு நாள் ஆகும்.

RC 249 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டெட் 2ஜி டேட்டா வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த சலுகைகள் அனைத்து ஏர்செல் பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 1.5GB அளவு 2ஜி டேட்டா வழங்கப்படுகின்றது.

சமீபத்தில் வோடபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா திட்டங்களை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.