முத்துப்பேட்டை அருகே பயிர் கருகிய அதிர்ச்சியில் விவசாயி மரணம்நீரின்றி சம்பா பயிர் கருகியது: அதிர்ச்சியில் மேலும் ஒரு விவசாயி சாவு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மேலபெருமழை கிராமத்தை சேர்ந்தவர் காத்தமுத்து (59). விவசாயியான இவர்  தனது மற்றும்  மகன்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் வயலில் சம்பா நேரடி விதைப்பு செய்து இருந்தார். காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாததாலும் பயிர்கள்  கருக தொடங்கின. தினந்தோறும் வயலுக்கு சென்று கருகிய பயிர்களை பார்த்து காத்தமுத்து  மன உளைச்சலில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற காத்தமுத்துவுக்கு கருகிய பயிர்களை பார்த்து  மாரடைப்பு ஏற்பட்டது.  வயலிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.  இறந்த காத்தமுத்துவுக்கு மனைவி நாகவள்ளி, ராமமூர்த்தி என்ற மகன், அமுதா, கீதா, காந்திமதி என்ற 3 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து எடையூர் போலீசாரும்,  வருவாய் துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.

தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் நாகை மாவட்டத்தில் 11 பேர், திருவாரூர் மாவட்டத்தில் 4 பேர், தஞ்சை மாவட்டத்தில் 4  பேர், கரூர் மாவட்டத்தில் ஒருவர் என ஏற்கனவே 20 பேர் இறந்துள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.