கோடிக்கணக்கான பணத்துடன் கைது செய்யப்பட்டு வரும் பா.ஜ.க.வினர்பா.ஜ.க அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின் நாடுமுழுவதும் நடத்தப்பட்ட பல சோதனைகளில் 400   க்கும் மேற்பட்ட வழக்குகளை வருமான வரித்துறை விசாரித்துள்ளது. இதில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை கண்டறிந்துள்ளதாகவும் அது தெரிவித்தது.
30 க்கும் மேற்பட்ட வழக்குகள் அமலாக்கத்துறையிடம் பரிந்துரைக்கப்பட்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 18 வழக்குகள் பெங்களூருவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 500, 1000 செலாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதிலும் அதிகளவில் பா.ஜ.க. வினரே அதிக பணத்துடன் காவல்துறையில் சிக்கியுள்ளனர். இந்த அறிவிப்பின் மறுநாளே ராஜஸ்தான் பா.ஜ.க.வின் ஜிதேந்திர குமார் சாஹு என்பவர் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுக்களை லஞ்சமாக பெற்று காவல்துறையிடம் பிடிபட்டார்.

இதே போன்று சேலம் மாவட்டத்தில் மோடியின் இந்த நடவடிக்கையை ஆதரித்து பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்த பா.ஜ.க வை சேர்ந்த அருண் என்பவர் 20.55 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய்களுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டார். இவரிடம் இருந்து 926  புதிய 2000 தாள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
மேற்கு வங்கத்தில் மற்றுமொரு பா.ஜ.க. தலைவர் 33 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் காவல்துறையிடம் பிடிபட்டுள்ளார். இந்த பணத்துடன் இவரிடம் இருந்து பல துப்பாக்கி முதலிய ஆயுதங்களும் 89 துப்பாக்கி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி மகாராஷ்டிராவில் 91.5 லட்சம் மதிப்பிலான செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் தாள்கள், மகாராஷ்டிர கூட்டுறவுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. நம்வம்பர் 9 ஆம் தேதி காசியாபாத் பா.ஜ.க. தலைவரது வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கை பண பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கருப்புப்பணம் மீதான நடவடிக்கை என்று பா.ஜ.க. வினர் கூறி வரும் இவ்வேளையில் தேசம் முழுவதும் பல இடங்களில் பா.ஜ.க. வினரே இத்தகைய பணத்துடன் காவல்துறையில் சிக்கியிருப்பது பொதுமக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக ராஜஸ்தானின் பா.ஜ.க எம்.எல்.ஏ. கியான் தேவ் அஹுஜா என்பவர் தான் கருப்புப் பணத்தை பெற்றுக்கொள்வதாக வெளிப்படையாகவே ஒப்புகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.