பால்தாக்கரே மரணமும். ஜெயாவின் மரணமும் - தமிழகம் அமைதி பூங்க என்பது மீண்டும் நிரூபணமானதுதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலை மெரீனா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கும் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் குழுமினர்.
ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தும், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தும் லட்சோபலட்ச மக்கள் திரண்டும் கடைகளை அடைக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை,
கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் நாடு முழுவதும் அமைதியான முறையில் கண்ணீர் விட்டு அழுதனர்.
மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்ததையொட்டி சிவசேனா கட்சியினர் கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை மிரட்டினர். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். பேரூந்துகள் மீது தாக்குதல் நடத்தினர்.
மராத்திய மொழி பேசாத இந்துக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

நாட்டில் தினமும் பலர் பிறக்கிறார்கள், பலர் இறக்கிறார்கள் இதற்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டுமா ? என்று பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்ட மாணவியும், அந்த ஸ்டேடஸுக்கு லைக் போட்ட மாணவியும் கைது செய்யப்பட்டனர். மாணவியின் உறவினரின் கிளினிக் அடித்து நொறுக்கப்பட்டது.
இவ்வளவுக்கும் பால்தாக்கரே முதல் அமைச்சரோ, ஆளும் கட்சியோ கிடையாது. சாதாரண நிலையிலும் வன்முறை வெறியாட்டத்தை இந்துத்துவ பாசிச கூட்டம் அரங்கேற்றியது.
இன்று தமிழகத்தின் சக்தி வாய்ந்த வீர பெண்மணியான முதல்வர் ஜெயலிதாவின் மரணத்தையொட்டி சிறு அசம்பாவிதங்கள் கூட இல்லாத அளவிற்கு அதிமுகவினர் அமைதியான முறையில் தங்களது கண்ணீரை சிந்தினர்.

அரசியலில் நேருக்கு நேர் எதிரியாக இருந்தாலும் திமுகவினர் அரசியல் நாகரீகத்துடன் கண்ணியமான முறையில் நடந்து கொண்டனர்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி போன்றோரின் கருத்துக்கள், அறிக்கைகள் பெருமைக்கொள்ளும் விதமாகவே இருந்தது.
திமுக தொண்டர்கள், அதிமுக தொண்டர்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.
அதேசமயம் ஜெயலலிதாவின் மரணத்திலும் பிணத்தை வைத்து அரசியல் செய்த கேவலமான கட்சி பாஜக என்பதையும் பல இடங்களில் இன்று காண முடிந்தது.
பாசிச பயங்கரவாத பாஜக கூட்டத்தைப்போல் கேவலமான கட்சி இந்தியாவிலேயே கிடையாது. மனிதகுல எதிரியான பாஜகவின் ஈனபுத்தியை இன்று தமிழக மக்கள் கண்டு விட்டார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.