ரோகிங்கிய முஸ்லிம்களுக்காக பிரான்சில் ஆர்பாட்டம்.எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியுடன்  16/12/2016 நேற்று    பிரான்சில்  அமைந்துள்ள  மியான்மர்  தூதுவர் அலுவலகம்  அருகில் ரோஹிங்கிய முஸ்லீம்  மக்களுக்கான ஆர்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது .

அல்ஹம்துலில்லாஹ் !

இவ்வார்பாட்டத்தை பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பாக  JMC-internatinal மற்றும் OCC-France அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது..எமது சகோதர உறவுகளான மியன்மார் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாகவும் அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைக்கெதிராக கண்டணம் தெரிவித்ததுடன் ஐக்கிய நாடுகள் சபை,உலக நாடுகள் ,வல்லரசுகள் ,பொது அமைப்புகள்,இன்னும் மெளனிகளாக இருந்து வேடிக்கை பார்க்காமல் அப்பாவி மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக முன்வந்து குரல் கொடுக்க வேண்டிக் கொண்டதுடன்,மத்திய கிழக்கு பிரதேசங்களில் குறிப்பாக சிரியாவில் திட்டமிட்ட இன அழிவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டியும் அரைகூவல்விடுத்ததுடன் அவர்களுக்கு ஆதரவான பிரேரனைகள் நிறைவேற்றத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு சார்பாக மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வேண்டி கொள்ளப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !

இதில் பிரான்ஸ் வாழ் இலங்கை உறவுகளும்,UFB அமைப்பும் அதன்உறுப்பினர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிட்டத்தக்கது.அத்துடன் மியன்மார்,பங்களாதேஸ்,பாகிஸ்தான் சகோதரர்களும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்கியிருந்தார்கள் அல்லாஹ் அவர்களது உணர்வையும் நல்லெண்ணத்தையும் அங்கீகரித்து அருள்புரிவானாக ஆமீன்.எமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்மை பொருத்தவரை இது ஒரு சிறந்த முயற்சியாகவும்,எமது உள்ளக்குமரல்களை வெளிப்படுத்தவும், மனக் கவலைகளுக்கு ஆறுதலாகவும், சமூக எதிரிகளுக்கு சவாலாகவும் சமிக்கையாகவும் நிச்சயம் அமைந்திருக்கும் என எதிர் பார்கிறோம் .இன்ஷா அல்லாஹ் இதை விட இன்னும் பலமான ஆரோக்கியமான அடிப்படையில் மனிதஉரிமை செயற்பாடுகளையும் சமூக பணிகளையும் முன்னெடுத்து பயணிக்க இருக்கின்றோம் .எமது உறவுகளுக்கான விடியலுக்கான இப்பயணத்தில் சகல மக்களும் இணைந்து முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

அனைவரும் எமது சமூகத்தின் எழுச்சிக்கா ஒண்றிணையுங்கள்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.