பெண்ணுக்கு ஆபாச மெசேஜ், படங்கள் அனுப்பிய இளைஞர் கைதுசென்னையில் பெண் ஒருவருக்கு, ஆபாச மெசேஜ் மற்றும் படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த, இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மண்ணடி பகுதியை சேர்ந்தவர் முகமது ஃபைசூதின் (23). இவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் திருமணமான பெண் ஒருவருக்கு, தொடர்ச்சியாக, வாட்ஸ் ஆப் மூலமாக, ஆபாச புகைப்படங்கள், மெசேஜ் போன்றவற்றை அனுப்பி வந்துள்ளார். அந்த பெண், இதுபற்றி கண்டிப்பு செய்தும் முகமது ஃபைசூதின் தொடர் தொல்லை கொடுத்துள்ளார்.


இதன்பேரில் அந்த பெண்ணின் கணவர், போலீசாரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த இளைஞரை சென்னை பாரிமுனை போலீசார் கைது செய்துள்ளனர். பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்தும் அவர், அந்த பெண்ணுக்கு இவ்வாறு தொல்லை கொடுத்து வந்ததாக, ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.