மல்லிப்பட்டினத்தில் பதற்றம்: பொதுமக்கள் மறியல், காவல்துறை தடியடி....! கடைகள் அடைப்பு...! போட்டோ இணைப்புமல்லிப்பட்டினத்தில் பதற்றம்: வங்கியில் பணம் இல்லாததால் பொதுமக்கள் மறியல், காவல்துறை தடியடி....! கடைகள் அடைப்பு...!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த, மல்லிப்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் இல்லாததால் திங்கள் அன்று மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த வாரம் முழுவதும் பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களாகவும் வங்கி விடுமுறை இந்நிலையில் நேற்று வங்கியில் பணம் எடுக்க வந்த பொதுமக்களிடத்தில் வங்கியில் பணம் இல்லை.

இதனால் எதிர்வரும் 15ந் தேதி வியாழக்கிழமைதான் பணம் வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன் தலைமையில் வந்த அதிரடிப்படையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த நூருல் இஸ்லாம், அரபாத், பைசல் அகமது உள்ளிட்ட சிலரை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்றதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பதற்றம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன.

சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். தங்களுக்குரிய பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு வந்த பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.