கருப்பு பணம் குறித்த தகவலை அளிக்க புதிய மின்னஞ்சல் அறிமுகம்..!வங்கி கணக்கில் அதிக பணம் வரவு வைத்த 3 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தில் இருந்து கருப்பு பண பதுக்கலை கண்டறிய பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாடுமுழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 291 பேரிடம் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தற்போது வரை 316 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதில் 80 கோடிக்கும் மேல் புதிய ரூபாய் நோட்டுக்கள் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கருப்பு பணம் குறித்த தகவலை அளிக்க புதிய மின்ஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. blackmoneyinfo@incometax.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் கருப்பு பணம் குறித்த தகவலை அளிக்கலாம் என்று வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.