ஐஎஸ் அமைப்பு அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்குகிறது துருக்கி ஜனாதிபதி குற்றசாட்டுஅமெரிக்கா ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கி ஜனாதிபதி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி ஜனாதிபதியான ரிசிப்  தயிப் எர்டோகன் நேற்று  செவ்வாய்கிழமை நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது அமெரிக்காவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.

அமெரிக்கா தீவிரவாத படைகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அதில் ஐஎஸ் தீவிரவாதிகள், ஒய்பிஜி மற்றும் பிஒய்டி யும் அடங்கும் என கூறியுள்ளார்.அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தெளிவுப்படுத்துகின்றன என கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் சிரிய ஜனாதிபதியான பஷிர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை உருவாக்கி வருவதாகவும், இதை தாம் முறியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.