சஹாரா பாலைவனத்தில் அதிசய பனிப்பொழிவு (படங்கள்)பொதுவாக கிருஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கிருஸ்தவ மத விழாக்கள் நெருங்கும் போது பனிப்பொழிவுடன் கொண்டாடும் இங்கிலாந்து இந்த வருடம் வறண்டு போயிருக்க, பனிப்பொழிவுகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத உலகின் மிகவும் சூடான பாலைவனமான சஹாராவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சஹாரா பாலைவனத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படும் அல்ஜீரியா நாட்டின் அய்ன் செஃப்ரா (செந்நிற கண் என்று பொருள்) என்ற செம்மைநிற மணலால் சூழப்பட்ட பாலைவன நகரம் பனிப்பொழிவால் ஒருநாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது பார்ப்போரின் கண்களுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், அற்புத காட்சியாகவும் திகழ்ந்துள்ளது.

இதற்குமுன் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் அரைமணி நேர பனிப்புயலை சந்தித்திருந்த இந்நகரம் மீண்டும் 37 ஆண்டுகளுக்குப் பின் வெண்மைநிற பனிப்போர்வையால் போர்த்தப்பட்டது. இந்நகரம் இன்னும் 15,000 ஆண்டுகளில் பச்சைபசேல் என பசுமை நகராக மாறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

குறிப்பு:
"சஹாரா" என்ற அரபிச் சொல்லுக்கு "பாலைவனம்" என்றே அர்த்தம். அதாவது நாம் ஷாப்பு கடை, கேட்டு வாசல், கண்ணாடி கிளாஸ் என்று சொல்வது போல்.
Source: Mirror / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.