முத்துப்பேட்டை பகுதியில் இறைச்சிக்காக வேட்டையாடப்படும் அரியவகை வெளிநாட்டு பறவைகள்முத்துப்பேட்டை பகுதியில் இறைச்சிக்காக தினமும் அரியவகை வெளிநாட்டு பறவைகள் வேட்டையாடப்படுகிறது. இதை வனத்துறையினர் கண்டுக்கொள்ளலாமல் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதியில் அமைந்து ள்ள அலையாத்தி காடுகளுக்கு வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து விதவிதமான அரியவகை  கலர்புல் பறவைகள் வருடந்தோறும் லட்சக்கணக்கில் வந்து திரும்புகின்றன.

அவைகள் கடல் நடுவே மிகப்பெரிய பரப்பளவில் பசுமை போர்த்தி பரந்திருக்கும் அலையாத்தி காடுகளிலும் அதனையொட்டியுள்ள தொண்டியக்காடு ஏரிகள் மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திலும் இப்பறவைகள் தஞ்சமடைகின்றன. அதேபோல் முத்துப்பேட்டை சுற்று பகுதியிகளில் உள்ள வயல்வெளிகளிலும் இரைதேடி பூச்சி புழுக்களுக்காக அலைகின்றன. இந்நிலையில் இப்பறவைகளை முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் இறைச்சிக்காக வேட்டையாடுவதை பல ஆண்டுகளாக தொழிலாக தொடர்கின்றனர்.

வனத்துறை அதிகாரிகள் கெடுபிடியை மீறி பிடிப்பதாக கூறி அதிக விலைக்கு வெளிநாட்டு பறவைகளை இறைச்சிக்காக விற்கின்றனர். குறிப்பாக செங்கால் நாரை, சாம்பல் நாரை, நத்தை கொத்திநாரை, கூழைக்கிடா, சிறவி பறவை, வெண்கொக்கு, கருமூக்கி வெண்கொக்கு, மடையான் உள்ளிட்ட பறவைகள் கண்ணி வைத்தும் வலைவிரித்தும் பிடிக்கப்படுகின்றன. இதை வனத்துறையினர் கண்டுக்கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்துவனத்துறையினர் தரப்பில் கூறுகையில்: பறவை வேட்டையை தடுக்க ஏற்கனவே தனிக்குழு அமைக்கபட்டு கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டிருந்தது. பின்னர் வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அந்தகுழு கலைக்கப்பட்டு விட்டது. வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட பணியாளர்கள் பற்றாக்குறையும் தொடர்கிறது. இதனால் பறவை வேட்டையை முழுமையாக தடுத்து நிறுத்துவதில் சிர
மம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

விலைப்பட்டியல் பறவைகளை வேட்டையாடி விற்கும் சிலர் இன்றைய விலை என்று பட்டியல்  போட்டு கையில் மெனுவுடன் விற்பனையில் ஈட்டுபட்டுள்ளனர். அதன்படி நேற்றைய விலை நிலவரம்:

* சிறவிபறவை:ரூ.200 லிருந்து ரூ.300.
* நாரைகள்:ரூ.700 லிருந்து ரூ.1200.
* மடையான், கொக்குகள்:ரூ. 100லிருந்நு ரூ.200.
* கூழைக்கிடா:ரூ 1500 முதல்ரூ.3500வரை விற்பனை செய்யப்பட்டது.

வனத்துறை நடவடிக்கை இல்லை இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், எப்போதும் போல இந்தாண்டும்  முத்துப்பேட்டை பகுதியில் லட்சக்கணக்காண வெளிநாட்டு பறவைகள் வந்தவண்ணம்  உள்ளது. அதனை வேட்டையாடும் கும்பலும் அதிகரித்து உள்ளது. எங்கு  பார்த்தாலும் அரியவகை பறவைகள் வேட்டையாடி சர்வ மாதாரணமாக விற்பனையாகி வருகிறது. தறஇதனை வனத்துறையினர் கண்டும்காணாமல் உள்ளது வேதனையை  தேறுகிறது. இதற்கு வனத்துறை உயரதிகள் தக்க நடவடிக்கை எடுத்து இப்பகுதியில்  உள்ள பறவைகளை பாதுக்காக்க வேண்டும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.