அமெரிக்காவில் பள்ளிவாசல்களுக்கு வந்த மர்மமான மிரட்டல் கடிதம்.!அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டுடிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள மசூதிகள் சிலவற்றிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

 அதில் சாத்தானின் குழந்தை என்ற தலைப்பில் ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் டிரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார். நீங்கள் உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கடிதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் இது ஒரு வெறுப்பு கடிதம் என்பதால் இதன் மீது விசாரணை நடத்த முடியாது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து டிரம்ப் அலுவலகம் தரப்பில் எந்த ஒரு கருத்தும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.