தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை: மத்திய மோடி அரசின் கேம் ஸ்டார்ட் .....தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை : துணை ராணுவப்படை குவிப்பு

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் மூலம் கோடிகளை குவிக்கலாம் என்பதற்கு வித்திட்டவர் ராம மோகன ராவ். 1990-ம் ஆண்டுகளில் அன்றைய செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக ராம மோகனராவ் இருந்தார். மணல் எடுக்க அனுமதி தருவதன் மூலம் பணம் பெறலாம் என ஆட்சியாளர்களுக்கு சொல்லியவர் ராம மோகன ராவ். ராம மோகனராவ் உருவாக்கி தந்த திட்டம் மூலமே மணல் குவாரிகள் அரசு வசமானது. மணலை வியாபார பொருளாக்கி பல்லாயிரம் கோடி புரள செய்த பெருமை ராம மோகன ராவுக்கு பெரும் பங்கு உண்டு.

தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலைமை செயலர் வீடு சோதனைக்கு ஆளாவது இதுவே முதல் முறையாகும். சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம மோகன ராவ் யார்?
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20-வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர் பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகின.

சேகர் ரெட்டிக்கு ரூ.10,000 கோடி அரசு ஒப்பந்த பணிகள்
சேகர் ரெட்டி ரூ.10,000 கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இந்த ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்புதல் அளித்தவர் தலைமை செயலர் ராம் மோகன ராவ் தான்.

அதிர்ச்சியில் தமிழக அரசு
தலைமை செயலர் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் அமைச்சர்கள், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராம் மோகன ராவ் தங்களையும் காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அதிகார மையங்கள் அச்சத்தில் உள்ளது.

பதில் சொல்வாரா பன்னீர் செல்வம்
தலைமை செயலர் வீட்டு சோதனை பற்றி முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கருத்தை அறிய நிருபர்கள் முயற்சி செய்தனர். பிற்பகலில் பன்னீர் செல்வம் கருத்து தெரிவிப்பார் என செய்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

13 இடங்களில் சோதனை
ராம மோகன ராவ், அவரது மகன், சகலை வீடு, மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

துணை ராணுவப்படை குவிப்பு
தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் வீட்டிற்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணாநகரில் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுவதை அடுத்து மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.