திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் விவரம்..!மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு, மூச்சுத் திணறலை சரிசெய்வதற்கான டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இரண்டாவது முறையாக கருணாநிதி நேற்று அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றை சரிசெய்ய கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில்
வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக சற்று முன் வெளியிடப்பட்ட அறிக்கையில், மூச்சுத் திணறலை சரிசெய்ய அவருக்கு அதிநவீன சிகிச்சையான டிரக்கியோஸ்டமி சிகிச்ச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, அவரது மகனும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், உடன் இருந்து கவனித்து வருகிறார்.

ஊட்டசத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டினால், கடந்த 1ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, கடந்த 7ம் தேதி கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார். இந்நிலையில், தற்போது சளிப் பிரச்னைக்காக கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்தனர்.

மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கருணாநிதி தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை என்றும் அவர் நலமுடன் இருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.