மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் ராணுவ ரீதியாக அமெரிக்க இனி தலையிடாது: - டிரம்ப் திட்டவட்டம்இதரநாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் ராணுவ ரீதியாக அமெரிக்க தலையிடாது என புதிய அதிபராக பொறுபேற்க உள்ள டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வடக்கு கரோனிலாவில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப இதனை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக ஐஎஸ் தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்கா முழு கவனம் செலுத்தும் என்றார் அவர். அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லாமல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டபோவதில்லை என்பது டிரம்பின் வாக்குறுதியாகும்.

அமெரிக்க ராணுவம் பலவீனம் அடைந்துள்ளதாக கூறிய டிரம்ப் அதை சீரமைக்க கோடிக்கணக்கான ரூபாய் டாலர் செலவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உள் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் பாலங்கள், விமானநிலையங்கள் மேம்படுத்தப்படும் எனவும் டிரம்ப் கூறினார். பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு முன்னாள் தளபதி மார்டிஸ் மிகவும் பொருத்தமானவர் என கூறிய டிரம்ப் அவரை நியமிக்க சிறப்பு விளக்கம் அளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

முந்தைய ஆட்சிகளில் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் அமெரிக்க ராணுவம் அத்துமீறியுள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.