சவுதி – பஹ்ரைன் இடையே புதிய கடற்பாலம் !சவுதி – பஹ்ரைன் இடையே 'கிங் பஹத் காஸ்வே' (King Fahd Causeway) என்ற பெயரில் 25 கி.மீ தூர கடற்பாலம் 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டு நவம்பர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் சராசரியாக நாளொன்றுக்கு இருபுறமுமாக 40,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 'கிங் ஹமாத் காஸ்வே' (King Hamad Causeway) என்ற பெயரில் புதிய கடற்பாலம் ஒன்றை நிர்மானித்திட ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புதிய கடற்பாலத்தை தனியார் நிறுவனங்கள் கட்டவுள்ளன.

இந்த கடற்பாலத்தையொட்டியே, GCC Railway Network எனப்படும் வளைகுடா அரபுநாடுகளை ஒன்றிணைக்கும் 2,170 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே திட்டத்தின் கீழ் ரயில்வே கடற்பாலமும் கூடுதலாக அமையவுள்ளது. இந்த புதிய திட்டங்கள் இன்னும் 4 ஆண்டுகளில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.