அப்பல்லோ கம்யூட்டரில் ஊடுறுவியதாக ஹேக்கர்ஸ் லெஜ்ஜியன் குழு பரபரப்பு தகவல்சென்னை அப்பல்லோ மருத்துவமனை கம்யூட்டரில் ஊடுருவி முக்கிய தகவல்களை திரட்டியுள்ளதாக லெஜ்ஜியன் என்ற ஹேக்கர்ஸ் குழு தெரிவித்துள்ளது. அமெரி்க்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் தமது லெஜ்ஜியன் குழுவிடம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. பேட்டியில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் கம்யூட்டர்களில் ஊடுருவி முக்கிய பிரமுகர்களுக்கு தரப்பட்ட சிகிச்சை விவரங்களை கலவாடி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த தகவல்கள் சில ஆச்சரியம் தருவதாக உள்ளது, என்று கூறியுள்ள லெஜ்ஜியன் குழுவினர் சிகிச்சை விவரங்களை வெளியிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் என்று பேட்டியில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை முடக்கியவர்கள் தான் லெஜ்ஜியன் குழுவினர்கள். அடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி தப்பியோடிய லலித்மோடியின் கம்யூட்டரில் ஊடுருவி தகவல்களை திருட்டுவது தங்களது இலக்கு என்று லெஜ்ஜியன் குழு கூறியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.