முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு .. தீவிர சிகிச்சை - அப்பல்லோ அறிக்கைமுதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தொடர் சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் இன்று திடீர் என மாறுபாடு ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்தது. குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வந்தனர். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தற்போது அவரது இதயத்தையும், சுவாச பிரச்சினையையும் மருத்துவர்கள் உற்று கவனித்து தொடர் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவர உடல் நிலையை இதயவியல், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.