முத்துப்பேட்டையில் சாலையில் ஓடும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்முத்துப்பேட்டையில் சாலையின் நடுவே வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை பேரூராட்சி 8வது வார்டு பகுதிக்குட்பட்ட தென்னை மரைக்காயர் தெரு, மற்றும் பினாமுனா  லைன் பகுதியில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள சிமென்ட் சாலையில் நடுவே தரைக்கு கீழ் செல்லும் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வழிந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, வருவதுடன் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது.

இது குறித்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து திமுக நகர துணை செயலாளர் சியா நவாஸ்கான் கூறுகையில்: தென்னை மரைக்காயர் தெரு, மற்றும் பினாமுனா லைன் பகுதியில் மாதக்கணக்கில் சாலையின் நடுவே கழிவுநீர்கள் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் கழிவுகள் சாலையில் கிடந்து பல்வேறு தோற்று நோய்களை பரப்பி வருகிறது. சாலையில் நடக்கவே அருவருப்பாக உள்ளது.  இது சம்மந்தமாக பலமுறை பேரூராட்சி அலுவலர்களிடம் கூறியும் நடவடிக்கையில்லை. எனவே உடனடியாக இப்பணியை துவங்காவிட்டால் திமுக சார்பில்  போராட்டம் நடத்தவேண்டிய அவசியம் ஏற்படும் என்றார்.

செயலிழந்த பேரூராட்சி
இதுகுறித்து முஸ்தாக் கூறுகையில் பேரூராட்சி நிர்வாகம் செயலிழந்து உள்ளது. மக்கள் பயன் பெரும்  எந்த பணியையும் பேரூராட்சி நிர்வாகம் செய்ய அலட்சியம் காட்டி வருகின்றனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பற்றி பேரூராட்சியில் புகார் தெரிவித்து எந்த பயனும் இல்லை. இதில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மட்டும் அல்லாமல் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மக்கள் நலன் கருதி உடனடியாக இதனை சீரமைத்து சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.