மிரட்டப்பட்டதா தந்தி தொலைக்காட்சி?வாரம்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தகவல் குறித்து சம்மந்தப்பட்ட நபர்களின் பேட்டியை வெளியிட்டு வருகிறது தந்தி தொலைக்காட்சி.

அதுபோல் இன்று(16.12.16) இரவு 9 மணிக்கு மறைந்த ஜெயலலிதாவின் உறவினர் தீபாவின் பேட்டி வெளி வருவதாக விளம்பரம் செய்து வந்தது தந்தி தொலைக்காட்சி.

பரபரப்பான தகவலாக இருக்கும் என எதிர்பார்த்தனர். அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் பரபரப்பாக எதிர்பார்த்த அந்த பேட்டி அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெளியிடபடவில்லை

தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் என்ன காரணம் என தகவல் சொல்லப்படவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை வெளியிட கூடாது என எதாவது மிரட்டல் சென்றிருக்குமோ என தந்தி டி.வி பார்வையாளர்கள் சந்தேகிக்கிறார்கள்.

அப்படியொரு மிரட்டல் நடவடிக்கை உண்மையாக இருக்குமானால் அரசின் தரம் என்ன என மக்கள் கனித்துவிடுவார்கள். பாண்டே போன்ற ஆட்கள் இனி விவாதம் நடத்தும் தகுதியை இழந்துவிட்டார் என்பதே மக்களின் பார்வையாக இருக்கிறது

வாழ்க ஜனநாயகம்?⁠⁠
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.