மத்திய மோடி அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி அதிரடி நடவடிக்கைமேற்குவங்க மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும்
மத்திய_அரசுக்கு_எதிராக எதிர்க்கட்சிகளை_ஒருங்கிணைக்கும் முயற்சியிலும்_அவர்_ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அதில்,,,

மாநில அரசு குறித்த எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமின்றி தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் கூட மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டாம். எந்த ஒரு அவசர தகவலையும் முதல்–மந்திரி அலுவலகத்துக்கோ அல்லது தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கோ தான் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 2013–ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசு இருந்த போதும் இதே போல் ஒரு உத்தரவை மம்தா பானர்ஜி பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.