விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் சரணடைந்தனர் : அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டனர்கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டனர். 118 பயணிகளுடன் சென்ற லிபியா விமானம் மால்டாவிற்கு கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட லிபியா உள்நாட்டு விமானம் மால்டாவில் தரையிறக்கப்பட்டது. கடத்தப்பட்ட விமானத்தில் 82 ஆண்களும்,  ஒரு குழந்தை உள்பட   28 பெண்களும், 8 விமான பணியாளர்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தை 2 கடத்தல்காரர்கள் கடத்தியதாகவும், விமானத்தை வெடிக்க செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதனை தொடர்ந்து கடத்தல்காரர்களுடன் மால்டா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் தீவிரவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து முதல்கட்டமாக 65 பயணிகளை  கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.   பின்னர் அனைத்து பயணிகளும்  விடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்களுடைய புதிய கட்சியை பிரபலப்படுத்த விமானத்தை கடத்தியதாக கடத்தல்காரர்கள் தெரிவித்தனர். தன்னை அல்பாதோஅல்ஜாதித் என்ற புதிய கட்சியின் தலைவன் என கடத்தல்காரர் அறிவித்தனர். கடத்தல்காரர்கள் மல்டாவில் அரசியல் தஞ்சம் கேட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடத்தல்காரர்கள் சரணடைந்ததாகவும், காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.