பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தவில்லை - மோகன் பகவத் பொய்ச்சொல்லுவதற்கு அளவே இல்லையா?பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் ஆட்டுவிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வடோதரா நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். ஹிந்துத்துவத்தின் அடிப்படையில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், சரியான தலைமையின் கீழ் நாட்டை வலிமைபெறச் செய்யவுமான தேவை இருப்பதாகக் கூறிய மோகன் பகவத், இதற்கான முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ் மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.

ஹிந்துத்துவத்தை குறிப்பிட்ட மதத்துடனோ, சமூகத்துடனோ தொடர்புபடுத்துவது தவறானது என தெரிவித்த அவர், அது இந்த மண் சார்ந்த தத்துவம் என கூறினார். உலகில் அமைதி நிலவவும், பிரச்னைகளுக்குத் தீர்வை ஏற்படுத்தவும் ஹிந்துத்துவம் வழிகோலுகிறது என கூறிய மோகன் பகவத், உலகம் இதனை புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.