ஜமாஅத்தில் சென்ற முஹம்மத் சுஹைல் நீரில் மூழ்கி வபாத்! இன்னாலில்லாஹி (Photo)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற 20 வயதான இளைஞன் முஹம்மத் சுஹைல்ர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

இச்சம்பவம் இன்று (03.12.2016) சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாயல் ஒன்றுக்கு சமய வழிபாட்டிற்காக (ஜமாஅத்) ராஜகிரிய-அத்துருகிரிய பகுதியிலிருந்து 02.12.2016 அன்று 14 பேர் கொண்ட குழு ஒன்று வந்துள்ளது.

இவர்களில் சிலர் இன்று சனிக்கிழமை டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர்வழங்கும் டெவோன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். அகப்பட்ட குறித்த இளைஞனை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

முஹம்மத் சுஹைல் ராஜகிரிய-அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் இவரது சடலம் பத்தனை பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.