சசிகலா VS பார்ப்பனியம் - மார்க்ஸ்பார்ப்பனியத்திற்கு  சசிகலா முக்கியமில்லை அவரின் ஜாதிதான் முக்கியமே
சசிகலா
பார்ப்பனர் அல்லாத சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அவரை இந்துத்துவ / பா.ஜக எதிர்ப்பாளர் என நம்புவதும், அவரை பார்ப்பன சக்திகள் எதிர்ப்பர் என எதிர்பார்ப்பதும் அந்தக் காலம். இன்று பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர் / பழங்குடியினரையும் ஈர்ப்பதுதான் இந்துத்துவ சக்திகளின் திட்டம். சமீப கால இந்துத்துவ வன்முறைகள் ஒரு குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட சாதியாரைக் கொண்டுதான் நிறைவேற்றப்படுகின்றன. முசாபர் நகர் என்பது ஜாட்களை வைத்து முஸ்லிம்கள் தாக்கப்பட்ட கலவரம், முகமது அக்லக் விவகாரத்தில் (தாத்ரி) ரஜபுத்திரர்கள். தமிழகத்தில் கிழக்குக் கடற்கரையோரம் (ராமநாதபுரம், முத்துப்பேட்டை) தேவர்கள், தெற்கே நாடார்கள், மேற்கே கவுண்டர்கள்... கோவை வன்முறைகளில் தலித் பிரிவினர் பயன்படுத்தப் பட்டனர். நினைவிருக்கட்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.