துபாயில் 1 மணிநேரத்தில் 19 போக்குவரத்து குற்றங்கள் எற்படுத்திய பெண் !பொதுவாக, ஆண் ஓட்டுனர்களால் ஏற்படும் வாகன விபத்தைவிட பெண் வாகன ஓட்டுனர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களின் சராசரி அதிகம் என்றும் பெண் ஓட்டுனர்கள் மிக வேகமாக பதட்டமடைய கூடியவர்களாக இருப்பதுவே இதன் பிரதான காரணமென்றும் என்று துபை போக்குவரத்து காவல்துறையின் சான்றுகள் கூறுகின்றன.

துபையில் ஐரோப்பிய பெண் ஓட்டுனர் ஒருவர் 1 மணிநேரத்தில் மணிக்கு 220 முதல் 240 வரை வாகனத்தை மிக மிக அதிவேகமாக செலுத்தியதால் 19 முறை ரேடார் காமிராவில் சிக்கியுள்ளார், இப்படி ஒரு போக்குவரத்து விதிமீறல் குற்றம் துபையில் அதிகளவில் நடந்துள்ளது இதுவே முதன்முறை.

பொதுவாக 120 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றாலே ஒருமுறைக்கு 1000 திர்ஹம் அபராதம், 2 முதல் 3 மாதங்கள் வரை வாகனம் சிறைபிடிக்கப்படும் மேலும் டிரைவர் லைசென்ஸ் மீது 12 கரும்புள்ளிகள் விழும், இந்த தண்டனைகளை தற்போது 19ஆல் பெருக்கிக் கொள்ளவும்.

ஷேக் ஜாயித் ரோட்டில் நிகழ்த்தப்பட்ட இந்த குற்றம் குறித்து அப்பெண்ணிடம் போலீஸார் விசாரித்த போது, மருத்துவமனைக்கு செல்வதற்காகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானதாலும் வேகமாக வாகனம் ஓட்டியதாக கூறினார் என்றாலும் அவரது விளக்கத்தை ஏற்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.