ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடிப்பு: 12 பேர் பலிஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கு பயங்கரவாத அமைப்புகள் ஏதும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. குண்டு வெடிப்பின் தாக்கத்தில் அங்குள்ள பல கடைகள் சேதமடைந்தன. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஜபாலியா மாவட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் இது ஐ.எஸ். பங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் எந்த இயக்கமும் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்கவில்லை. கடந்த ஒருவாரத்தில் பாக்தாத்தில் தொடர்ந்து பல முறை குண்டுகள் வெடித்தன. மொசூல் நகரை மீட்க அமெரிக்காவின் உதவியுடன் அரசு படைகள் தாக்குதல் நடத்துவதால் ஐ.எஸ். பங்கரவாதிகள் குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.