துருக்கி விமானப்படைகள் குண்டுமழையில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலிசிரியாவின் அல்-பாப் நகரின் அருகே துருக்கி விமானப்படைகள் பொழிந்த குண்டுமழையில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த ஆறாண்டுகளாக அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான ராணுவப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு உதவியாக ரஷியா நாட்டு போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

சிரியா எல்லையோரம் உள்ள துருக்கி நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளின் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடிக்கடி ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக சிரியா நாட்டுக்குள் அவர்கள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து துருக்கி நாட்டு விமானப்படையும் தாக்கி வருகிறது.

அவ்வகையில், சிரியாவில் அல்-பாப் நகருக்கு அருகாமையில் உள்ள டைர் கக் உட்பட்ட பகுதிகளில் போர் விமானங்கள் நேற்று நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 18 பேர் பலியானதாக துருக்கி அரசு இன்று அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.