ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 21 பேர் பலி ..ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளதாகவும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநர் காபூலில் அமெரிக்கா பல்கலைகழகம் அருகிலும்,நூர் மருத்துவமனை அருகிலும் திடீரென குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவம் தற்கொலை படை ஒருவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளதாகவும், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பலியானவர்களில் பொதுமக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலை ஜபிகுல்லா முஜாஹித் பயங்கரவாதத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.