துபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிகள் காட்சிக்கு வைப்பு!துபையில் நடைபெற்று வரும் வருடாந்திர துபை ஷாப்பிங் திருவிழாவை (DSF - Dubai Shopping Festival) சிறப்பிக்கும் வகையில் நேற்று (வெள்ளிக்கிழமை – 20.01.2017) ஒரு நாள் மட்டும் சுமார் 35 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள 250 கிலோ தங்க பாளங்களை (250 KG GOLD BARS) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது

துபையிலுள்ள மால் ஆப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates) வளாகத்திலுள்ள ஜம்போ ஸ்டோரில் (Jumbo Stores) காட்சிக்கு வைக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த தங்க பாளங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனா் இந்தப் படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் என்ற  #jumboisgold ஹேஷ்டேக்குடன் பதிபவர்களில் ஒருவருக்கு 25,000 திர்ஹம் மதிப்புடைய தங்கத்தால் செய்யப்பட்ட 'பிளே ஸ்டேஷன் 4' பரிசாக (Dh25,000 worth of limited edition solid gold PlayStation 4) வழங்கப்பட்டுள்ளது..

Source: Gulf நியூஸ்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.