துபாய் விமான நிலையத்தில் மிட்டாய் தின்றவருக்கு 3 மாதம் சிறை !



வெயிட், வெயிட் சகோஸ்,    துபை விமான நிலையத்தில் மிட்டாய் திருடித் தின்றவருக்கு 3 மாதம் சிறை என தலைப்பை விரிவாக விளங்கிக் கொள்ளவும்.

திருடர்கள் பலவகை அதில் இந்த துபை விமான நிலையத்தில் விமானத்தில் லக்கேஜ்ஜூகளை ஏற்றும் பிரிவில் பணியாற்றி வந்த போர்ட்டர் ஒரு வகை. இவர் திருடுவதெல்லாம் பயணிகளின் பேக் ஜிப்பை திறந்து சாக்லெட் போன்ற மிட்டாய் வகைகளை மட்டுமே.

பலருடைய பேக்குகளை திறந்து மிட்டாய் வகைகளை திருடிவந்த இந்த பலநாள் 'சுவீட் கள்ளன்' ஒருநாள் சிசிடிவி வழியாக பிடிபட்டான். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்த மிட்டாய் திருடன் 'மை லார்ட்' நான் திருடியதெல்லாம் மிட்டாய்கள் மட்டுமே, வேறு எந்த விலை மதிப்புள்ள பொருளையும் திருடியதில்லை, திருடிய மிட்டாய்களை கூட உடனுக்குடன் தின்றுவிடுவேன் என ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டான்.

அப்புறம் 3 மாத சிறை தண்டனைக்கு பின் வேலையிழந்து நம்ம பக்கத்து நாட்டுக்கு திரும்ப வேண்டியது தான்.

Source: Syndicate.info / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.