ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடும் தீ .. இதுவரை 30 பேர் பலி.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 17 மாடி கட்டடமொன்றின் மேல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து குறித்த கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.

குறித்த கட்டடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது.

1962ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெஹ்ரானின் மிக உயர்ந்த கட்டடமாக விளங்கிய குறித்த கட்டடத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடினர்.

சுமார் மூன்றரை மணிநேரமாக வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வந்த நிலையில், குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதி முழுவதும் புகையால் சூழ்ந்துள்ளதுடன் உள்ளே சிக்கிய 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து விபத்து நேர்ந்த பகுதியில் வாயு கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தெஹ்ரானிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றன.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.