ஏர்டெல், வோடபோன், ஐடியாவிற்கு ரூ.3,050 கோடி அபராதம்?பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் ‘ஜியோ’ என்ற புதிய செல்போன் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது.

ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 தொலை தொடர்பு நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஜியோ செல்போன் அழைப்புகளுக்கு சரியான இணைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக அந்த நிறுவனம், ‘கால் டிராப்’ என்ற பிரச்சினையை (அழைப்புகள் இடையிலேயே துண்டிக்கப்படுவது) சந்தித்தது.
இந்த செயல், ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உரிமம் வழங்கியபோது, விதித்த விதிமுறைகளுக்கு மாறான செயலாக அமைந்தது. இதுபற்றி டிராயிடம் ரிலையன்ஸ் ஜியோ புகார் செய்தது. ஜியோ வாடிக்கையாளர்கள் மற்ற தொலைபேசி நிறுவன எண்களுக்கு தொடர்பு கொண்டால், சரியான இணைப்பு வசதி வழங்கப்படுவதில்லை.

ஜியோவின் வளர்ச்சியை முறியடிப்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக ‘ஜியோ’ நிறுவனம் சார்பில் டிராய் (இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு தலா ரூ.1,050 கோடியும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.950 கோடியும் அபராதம் விதிக்க தொலை தொடர்பு துறைக்கு டிராய் சிபாரிசு செய்தது. ஒரு தொலைத்தொடர்பு வட்டத்திற்கு ரூ.50 கோடி வீதம் ஏர்டெல் மற்று வோடபோன் நிறுவனத்திற்கு முறையே ரூ.1,050 கோடி (மொத்தம் 21 தொலைத்தொடர்பு வட்டங்கள்) அபராதமும் ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு ரூ.950 கோடி (மொத்தம் 19 தொலைத்தொடர்பு வட்டங்கள்) அபராதமும் டிராய் பரிந்துரை செய்துள்ளது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தலைமை வக்கீலின் (அட்டார்னி ஜெனரல்) கருத்தை தொலைதொடர்பு துறை கேட்டது.

அதை அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆராய்ந்து, டிராயின் விதிமுறைகளை மீறி, சேவை குறைபாட்டில் ஈடுபட்ட ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கும் மொத்தம் ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க, தொலைதொடர்பு துறைக்கு அதிகாரம் உண்டு என்று கருத்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவை தொலைதொடர்பு துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.