30 நாட்களுக்குள் ஐ.எஸ் அமைப்பை அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டம். ஒப்புதல் அளித்தார் ட்ரம்ப்.சிரியா மற்றும் ஈராக்கில் அட்டகாசம் செய்துவரும் ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை டொனால்டு டிரம்ப் நடைமுறைப்படுத்தி வருகிறார். மெக்சிகோ நாட்டினரின் ஊடுருவலை தடுக்க எல்லையில் சுவர் கட்டப்படும் என கூறியிருந்தார்

அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறும்  ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் ‘சஸ்பெண்டு’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் பாகிஸ்தான் நாட்டையும் சேர்க்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் அட்டகாசம்  செய்துவரும் ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் ஒன்றிணைந்து புதுவகை திட்டத்தை வகுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ஈராக் குடிமக்களை அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுத்துவிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க ராணுவம் எங்கிருந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த  உத்தரவை அமெரிக்க ராணுவம் நடைமுறைப்படுத்த முற்படும்போது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பை அமெரிக்க சந்திக்க நேரிடலாம் எனவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசாக ஆட்சியின் துவக்கத்திலேயே டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளதால், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரானது அடுத்தகட்ட நகர்வை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.