துருக்யில் பயங்கரம் 39 பேர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறிச்செயல்இஸ்தான்புல் நகரில் 39 உயிர்களை பலி வாங்கிய தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்

துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள அந்த பிரபல இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.

இன்று பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் நேற்றிரவு சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 70-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16-க்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டினர் என்றும் அவர்களில் இருவர் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதுதொடர்பாக, ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் நிர்வகித்துவரும் இணையதளம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ராஜ்ஜியத்தை சேர்ந்த வீரர்’ இந்த தாக்குதலின்போது உயிர் தியாகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.