முசப்பர்நகர் கலவரம்: 3 வருடங்களாகியும் மறுக்கப்படும் நியாயம்முசப்பர்நகர் கலவரம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் அதற்கு தொடர்புடைய பா.ஜ.க. தலைவர் சங்கீத் சோம் மீது இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்குகளை சிறப்பு விசாரணை குழு(SIT) விசாரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்குகளில் ஒன்றில், சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் முகம் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று பரப்பப்பட்டது தொடர்பான தகவல்களை  காவல்துறையினர் ஃபேஸ்புக் தலைமையகத்தில் இருந்து பெறுவதற்காக காத்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு வழக்கில் IPC பிரிவு 153-A இன் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மாநில அரசின் உத்தரவிற்காக காத்துக் கிடக்கின்றனர். ஆனால் மற்ற பிரிவுகளில் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

2013, ஆகஸ்ட் மாதம் முசப்பர்நகர் பகுதியில் பரவிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை காவல்துறையினர் கண்டுபித்தனர். அந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்படுவது போன்று இருந்தது. இதனையடுத்து, தாக்கப்படும் அந்த இளைஞர்கள் இந்து இளைஞர்கள் என்றும் அவர்களை முஸ்லிம்கள் தாக்கினர் என்றும் விஷமச்ச் செய்தி பரப்பப்பட்டது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தது சிவம் குமார் என்பவர் என்றும், அது பா.ஜ.க. தலைவர் சங்கீத் சோம்மின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அது பரவலாக பரப்பப்பட்டது என்று தெரியவந்தது.

இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி சங்கீத் சோம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவருடன் 229 அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் காவல்துறை IPC 420, 153-A, 120-B மற்றும் section 66 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

வழக்கு விசாரணையில் குமார் மற்றும் பா.ஜ.க தலைவர் சங்கீத் சோம் ஆகியோர் தங்களது ஃபேஸ்புக் பத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நீக்கிவிட்டது தெரியவந்துள்ளது. அது போன்றே அந்த 229 பேரும் தங்களது பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் நீக்கிவிட்டதாக இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி டி.எஸ்.தியாகி கூறியுள்ளார்.
மேலும், சங்கீத் சோம் மற்றும் சிவம்  குமார் ஆகியோரின் ஃபேஸ்புக் கணக்குகள் குறித்த தகவல்களை கலிஃபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக்கின் தலைமையகத்திடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஃபேஸ்புக் சில தகவல்களை கொடுத்ததாகவும் அது தங்களது போதுமானதாக இல்லை என்றும் இவ்வழக்கை நடத்த இன்னும் கூடுதலான தகவல் வேண்டும் என்ற காரணத்தினால் அதனை வேண்டி அவர்களுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தொடர்பான கடைசி கடிதம் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக எழுதப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை பெற ஃபேஸ்புக் அதிகாரி ஒருவரும் கலவரப்பகுதியை பார்வையிட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

சங்கீத் சோம் முசப்பர்நகர் கலவரம் வெடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அங்குள்ள ஒரு பஞ்சாயத்தில் வெறுப்புப் பேச்சினை பேசியதற்காக அவர் மீது மற்றொரு வழக்கில் சிறப்பு புலனாய்வுதுறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இவர் செப்டெம்பர் 21 ஆம் தேதி கைது செய்யபப்ட்டு மறுநாள் அவர் மீது NSA சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2013 நவம்பர் 7 ஆம் தேதி அது திரும்பப்பெறப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சங்கீத் சோம்மின் வழக்கறிஞர், சோம் தனது ஃபேஸ்புக் கணக்கை குறிப்பிட்ட தினத்தில் பயன்படுத்தவில்லை என்றும் மேலும் அவர் எந்த ஒரு வீடியோவையும் தனது கணக்கில் இருந்து பகிரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் மீது பதியப்பட்ட இரு வழக்குகளிலும் அவருக்கு பிணை கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சங்கீத் சோம், சிறையில் இருந்து விடுதலையான பின் இவருக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.