முத்துப்பேட்டை அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைதுமுத்துப்பேட்டை அருகே போலீஸ்காரருக்கு கொலை மிட்டல் விடுத்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழக்காடு சோதனை சாவடியில் களப்பால் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராஜ்குமார் (வயது 40) நேற்றுமுன்தினம் பணியில் இருந்தார். அப்போது கீழக்காடு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன்கள் அசோக்குமார் (24), ரஞ்சித்குமார் (22) மற்றும் ரவி மகன் சிவசுப்பிரமணியன் (24) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். இதனை போலீஸ்காரர் ராஜ்குமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், ராஜ்குமாரிடம் தகராறு செய்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

3 பேர் கைது
இதுகுறித்து ராஜ்குமார் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதிமுத்துராமலிங்கம், ஏட்டு சண்முகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.