ஒரு நாளைக்கு 4 கிலோ இறைச்சி, 36 முட்டைகள், 5 லீட்டர் பால் - சாப்பிடும் அதிசய மனிதர்ஒரு நாளைக்கு 4 கிலோ இறைச்சி, 36 முட்டைகள், 5 லீட்டர் பால் உணவாக உட்கொள்ளும் நபர்!

பாகிஸ்தானைச் சேர்ந்த 25 வயது அர்பாப் கிஸெர் ஹயட், 6 அடி 3 அங்குல உயரமும் 431.82 கிலோ எடையும் இருக்கிறார். இவரை ஹல்க் மனிதர் என்று அழைக்கின்றனர்.

உலகின் மிக வலிமையான மனிதர் என்று நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு டிராக்டரைக் கயிற்றால் பிடித்து நகர விடாமல் செய்திருக்கிறார்.

டிராக்டரை எவ்வளவு வேகமாக இயக்கினாலும் பின் சக்கரங்கள் மட்டும் இருந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தன. “இப்படி ஒரு உடல் எனக்கு அமைந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

எடை தூக்குதலிலும் மல்யுத்தத்திலும் சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கலோரிகள் என் உடலுக்குத் தேவைப்படுகின்றன.

காலை உணவாக 36 முட்டைகள், பகல் 3.5 கிலோ இறைச்சி, ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறேன்.

அளவுக்கு அதிகமான எடையால் என் உடலுக்கு இதுவரை எந்த நோயும் ஏற்பட்டதில்லை. எடை எனக்கு ஒருநாளும் சுமையாகத் தெரிந்ததில்லை” என்ற ஹயட், ஏற்கெனவே பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கிறார். உலக அளவில் வலிமையான மனிதராக வலம் வர வேண்டும் என்று விரும்புகிறார்.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.